7 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்த ராயன்.

tubetamil
0

 தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷின் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

மக்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ராயன். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மேலும் மிரட்டல் வில்லன் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் நடித்திருந்தார்.



முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது 7 நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி, இப்படம் வெளிவந்து 7 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. தனுஷின் 50வது படமான ராயன். 7 நாட்களில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top