உகண்டாவுக்கு டொலர்களை கடத்திய ராஜபக்சர்கள்..!

tubetamil
0

ராஜபக்சர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் உண்மைத் தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருமளவான டொலர்களை கொள்ளையடித்து உகண்டாவுக்கு ராஜபக்சர்கள் கொண்டு சென்றார்கள் என தெரிவித்த அநுர குமார தரப்பினர் தற்போது அது தொடர்பான உண்மைத் தன்மையினை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்நாட்டில் அரசியல்வாதிகள் திருடர்கள், இந்நாட்டில் ஊழல்கள் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன, இதனால் தான் இந்நாடு முன்னோக்கிச் செல்லாது  பின்னடைவையே சந்திக்கின்றது என்றெல்லாம் மக்கள் விடுதலை முன்னணியானது தொடர்ந்தும் மக்களுக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால் கடந்த காலங்களில் ஊடக சந்திப்புக்கள் நடத்தி நாடகமாடியோர் மீண்டும் அதே பணியினை செய்கின்றனர். நாம் கூறுவது என்னவென்றால், அரச தலைமையும் கிடைத்து, அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு அனைத்து வகையான அதிகாரங்களும் கிடைத்தும் மீண்டும் ஊடக நாடகத்தினையே நடத்துகின்றனர்.

ஏதும் ஒரு இடத்தில் திருட்டு இடம்பெற்றிருந்தால், ஊடக நாடகங்களை முன்னெடுக்காது, தயவு செய்து குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்து பொலிஸ் விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

உகண்டாவுக்கு டொலர்களை கடத்திய ராஜபக்சர்கள்! புதிய அரசாங்கத்திற்கு வேலை கொடுக்கும் மொட்டு | Legal Action Against The Rajapaksas

ராஜபக்சர்கள் திருடர்கள் என கடந்த காலங்களில் கூறியிருந்தீர்கள். 18பில்லியன் டொலர்களை உகண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தீர்கள். உடனடியாக இது குறித்து சாட்சிகளை தேடி உடனடியாக விசாரணை குழுவொன்றினை நியமித்து இவற்றை கண்டுபிடியுங்கள்.

ஏனெனில், இந்தப் பணத்தினை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக நீங்கள் தான் கூறியிருந்தீர்கள். இதனை கண்டுபிடிக்காது விட்டால் இதன் பின்னால் மக்கள் விடுதலை முன்னணிதான் இருக்கும் என மக்கள் நினைப்பார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கும் பழைய கதையினையே கூறி ஊடக நாடகத்தினை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அது நாட்டுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top