யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் முதலாவது பீடாதிபதி சோமசுந்தரம் கந்தையா அவர்களின் நினைவும் நினைவு விரிவுரையும் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கோட்போர் கூட மண்டபத்தில் விவசாய பீடத்தின் பீடாதிபதி K.பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா கலந்து கொண்டார்.நினைவு விரிவுரையினை யப்பான் நாட்டின் Kyushu பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் .DR-YASUHIRO MORITA அவர்கள் உலர் வலயத்தில் கால்நடை வளர்ப்பு என்ற தொனிப்பொருளில் விரிவுரையை நிகழ்த்தியிருந்தார்.
குறித்த நிகழ்வில் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், விவசாயபீடத்தைச்சேர்ந்த மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.