இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த வாழ்த்தினை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த பதவியில் வலுவான வெற்றிகளை ஈட்டுவதற்கு வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதவி நியமனத்தின் ஊடாக பெண் தலைவர்களுக்கான புதிய அலை உருவாகட்டும் என அவர் மேலும் வாழ்த்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் நட்பினை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜுலி ச்சாங் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.