யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.
மகோற்சவ நிகழ்வுகள் இன்றையதினம் காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளன.
12 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளன.இந்த மகோற்சவத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.