குரு, செவ்வாய் பார்வையால் துன்ப வாழ்க்கை மாறுமா?

tubetamil
0

 செல்வம், பெருமை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். ஜோதிடத்தில், சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறது என்பதைப் பார்த்து நமக்கு தெரிந்து விடும். வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.இது மட்டும் போதாது சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்கள் மற்றும் வீடுகளும் முக்கியமானவை. ஒருவருடைய ஜாதகத்தில் களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் பலமாக இருக்கும் போது அவருக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

குரு பகவானுக்கு இணையான கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். இதனால் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் சுக்கிரன் இருப்பார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் நல்ல மனைவி, நல்ல இல்வாழ்கை, வீடு, வாகன வசதி ஆகியவை கிடைக்கும்.

அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன், குரு பகவானுக்கு அடுத்த நிலையில் உள்ள சுபராக உள்ளார். சுக்கிரன் ஒருவரின் தோற்றம், ஆழகு, கலை ரசனை ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது.

ஒருவரின் காதல் வாழ்க்கை, திருமணம் ஆகியவற்றை அடைய சுக்கிரனின் அருள் முக்கியமானது. வாகனங்கள், வீடு, கலை, இசை ஆகியவற்றின் காரகத்துவத்தை சுக்கிரன் கொண்டு உள்ளார். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி மேஷ ராசிகாரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

மேஷம் ராசிக்கு தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை குறிக்கும் 2ஆம் இடத்திற்கும், திருமணத்தை குறிக்கும் 7ஆம் இடத்திற்கும் உரிமை கிரகமாக சுக்கிரன் உள்ளார். இந்த நிலையில் மேஷம் ராசிக்கு 6ஆம் இடமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசம் பெற்று உள்ளார்.இந்த யோகத்தால் திருமண வாழ்கையில் சில பிரச்னைகள், கணவன், மனைவி இடையே மனவேதனைகள், திருமணம் தள்ளிபோதல் உள்ளிட்ட சிக்கல்கள் இருந்து இருக்கும். உங்களுக்கு  வரவேண்டிய பணம் வராமல் தள்ளிப்போகும் என்ற நிலை இப்போதும் இருக்கும்.

ஆனால் கன்னி ராசியில் இருக்கும் சுக்கிரனை, ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் 5ஆம் பார்வையாக பார்க்கின்றார். இது நீசபங்க ராஜ யோகத்தை உண்டாக்கும். இதனால் குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி உண்டாகும்.

இதுவரை இருந்துவந்த சோதனைகள் தீரும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். விவாகரத்து வரை சென்ற திருமண உறவுகள் சரியாகி பழைய நிலைக்கு திரும்பவும் ஒன்று சேருவீர்கள்.

திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல திருமண வாழ்கை அமையும். வெளிநாடு செல்ல முயன்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைக்கூடும். உங்கள் ராசி நாதன் ஆன செவ்வாய் பகவான் 4ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்து சேர்க்கைகள் உண்டாகும். 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top