ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி வெளியிட்ட பின்னரான மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டமானது எதிர்வரும் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் இறுதி நிலைப்பாடு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி கூட்டத்திற்கு அனைத்து கட்சி அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.