2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது, இன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய, வேட்பாளர்களுடன் தேர்தல் நிதி விதிமுறைகள் மற்றும் பிற வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சில வேட்பாளர்கள் அரச வளங்களின் பயன்பாடு மற்றும் சில ஊடக நிறுவனங்களின் நடத்தைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, ஆணைக்குழுவில் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் தனியான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.