பேருந்தில் பலியான தாய்..!

tubetamil
0

கொழும்பின் புறநகர் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலமுல்லை - மீகொட வீதியில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ஏறச் சென்ற பெண் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த பெண் மற்றுமொரு நபருடன் தனியார் பேருந்தில் ஏறிய போது ​​அதிலிருந்து தவறி விழுந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய பேருந்துடன் சாரதி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். மீகொடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top