பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு..!!

tubetamil
0

 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த போராட்டமானது, இன்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன்போது, பெற்றோர், சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளடன் பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றினையும் ஒப்படைத்துள்ளனர். 

இந்நிலையில், போராட்ட களத்திற்கு, பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 


2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

குறித்த பரீட்சை ஆரம்பமாக சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் பரீட்சையின் முதல் தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட மாதிரிதாள் ஒன்றை வட்ஸப் செயலியில் பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நேற்று தீர்மானித்திருந்தது. 

இந்நிலையிலேயே, தற்போது இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top