இலங்கையில் நாளை மறுதினம் நாட்டின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலில் எப்படி வாக்களிப்பது, தவிர்க்க வேண்டிய விடயங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெளிவுபடுத்தியது.
இந்தநிலையில், தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த தேர்தல் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாதவிடத்து இரண்டாம் விருப்பு வாக்குகள் கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.