கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதி என கூறி 108 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று காலை டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.