இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீதமாக பதிவாகியிருக்கின்றது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமானளவு அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இவ்வருடத்தின் ஏப்ரல் முதல் ஜுன் வரையான 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக அதிகரித்திருப்பதன் மூலம், பொருளாதாரம் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 302 ரூபாவாக பதிவாகியிருக்கிறது.