மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய ஆயர்.

tubetamil
0

 மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக அன்டன் ரஞ்சித் ஆண்டகை தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு, இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

புதிதாக அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டுள்ள அன்டன் ரஞ்சித் ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இருந்து ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் வரவேற்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, வாத்திய அணிவகுப்புடன் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டதனைத் தொடர்ந்து மரியாள் பேராலயத்தில் பதவியேற்பினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில், மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோச் ஜீவராஜ் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் மற்றும் 243ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி விறிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வுகளில், மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோச் ஜீவராஜ் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் மற்றும் 243ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி விறிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top