ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரிவினைவாதிகள் வழங்கிய டொலர் முதலீடுகளை வைத்து தமது அரசியலை நகர்த்துவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்களவர்களளின் அடக்குமுறையை அகற்றுவோம், உங்களுக்கு 13ஐ முழுமையாக தருவோம் என வடக்குக்கு சென்று நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தை இவர்கள் விதைக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தத் தேர்தலில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வைத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திலீத் முன்வைத்துள்ளார்.
இதை இந்த நாட்டுக்கு சொல்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
உண்மையான ஒற்றுமை மற்றும் மறுசீரமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் எங்களிடம் உள்ளன.
எங்களது தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தச் சட்டம் வர்த்தமானியாக வெளியிடப்படும்.” என்றார்.