எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருகின்றமை போன்ற காரணங்களால் இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரின் எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.