மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆனொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதனால் அடையாளம் காண்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரியவருகின்றது.
குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.