ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 156 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை 4, 737 ஆக முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இந்த காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை 1,438 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், 3,299 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும் கிடைத்துள்ளன.
இதுவரையில் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 4,209 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 528 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.