தங்காலை - நலகம பொல்தவன சந்தியில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நலகமவை வசிப்பிடமாகக் கொண்ட தேஷான் எரந்த என்ற 33 வயதுடைய திருமணமாகாத கால்நடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாடு கட்டச்சென்ற இளைஞன் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் தேடியபோது சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தங்கல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.