யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் புலம்பெயர் ஈழத்தமிழ் குடும்பம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள நிலையில், மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.ஜெர்மனியில் இருந்து உடுப்பிட்டிக்கு விடுமுறைக்காக சென்ற கணவன் - மனைவியே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது யாழ். - உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.கடந்த எட்டாம் திகதி விபத்து ஏற்பட்ட நிலையில், படுகாயம் அடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.