யாழ்ப்பாணத்தில் பிறந்து 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குழந்தை கடந்த 31 ஆம் திகதி பிறந்துள்ளது.
குழந்தையின் நிறை குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியில் குறித்த சிசுவிற்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த 12ஆம் திகதி பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றையதினம் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிசுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.