தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தென்னிலங்கை வேட்பாளர்கள் முகவர்களை வடக்குக்கு அனுப்பி பிரசாரம் மேற்கொள்வதாக தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
பா.அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டமொன்று மன்னாரில் நேற்று இடம்பெற்றது.
குறித்த பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.