பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் பெற்றுக் கொடுக்காமல் 1350 ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளீர்கள் என பலர் விமர்சனம் செய்கின்றனர் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், 1700 ரூபாய் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன், இருந்தபோதிலும் 1350 பெற்று கொடுத்துள்ளோம். இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி ஆகும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக அக்கரபத்தனை பகுதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
அதேபோல் இதுவரையும் மலையகத்தை நாங்கள் எந்த இடத்திலும் தலைகுனிய வைத்ததில்லை அதுதான் எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.
அதேபோல் ஒரு சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களே 2018 ஆம் ஆண்டு 50ரூபாய் வாங்கி தருகிறேன் என்று கூறினர். இதுவரைக்கும் பெற்றுக் கொடுத்தார்களா? இல்லை.
அதேபோல் சஜித் பிரேமதாசவும் சிறு தோட்ட உரிமையாளர் ஆக்குகிறேன் என்று சொல்கின்றார். நடைமுறைப்படுத்துவதை சொல்ல வேண்டும். அதை விடுத்து பொய்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்” என்றார்.