மகளிர் கிரிக்கெட் அணிக்கு உள்வாங்கப்பட்ட லிமான்சா..!!

tubetamil
0

 அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடருக்காக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்,  19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு காலி-ரத்கம, தேவபதிராஜா கல்லூரியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சுமுது நிசன்சலா, சஞ்சனா கவிந்தி, ரஷ்மி நேத்ராஞ்சலி, ஹிருனி ஹன்சிகா, ஷெஹாரா இந்துவாரி மற்றும் நேதகி இசுரஞ்சலி ஆகியோர் அடங்குவர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷானின் மகள் லிமான்சா திலால்கரத்னவும் இந்த சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியில் அங்கம் வகிக்கிறார்.



இந்த அணிக்கு மொரட்டுவை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் மானுடி நாணயக்கார தலைமை தாங்குவார்.

6 பேர் கொண்ட இந்த அணி, 20க்கு 20 மற்றும் 50-ஓவர் போட்டிகள் இரண்டிலும் போட்டியிடும்,

2024, செப்டம்பர் 20 இல் ஆரம்பமாகும் இந்த சுற்றுப்பயணத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top