மிருவதைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து 21 ஆடுகளை கூலர் வாகனத்தில் சுகாதார வசதிகள் மற்றும் தண்ணீர், காற்றோட்டம், உணவு உள்ளிட்ட வசதிகள் கால்நடைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
வாகனம் முழுமையாக மூடி அடக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதுடன், வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியரின் அனுமதிப்பத்திரம் இன்றி அனுராதபும் நோக்கி கொண்டு செல்ல முற்ப்பட்டதாக விசாரணைகளில் தெரியவதுள்ளது.
பொலிசாரின் வீதி சோதனையின் மூலம் குறித்த வாகனம் மற்றும் கால்நடைகளை கொண்டு சென்ற வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.