தென்னிலங்கையில் அரசியல்வாதி ஒருவர் 400 கோடி ரூபா பெறுமதியான இரத்தின கற்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகருக்கு நெருக்கமான ஒருவரினால் அவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு கிடைத்த பணமும், பல்வேறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் கிடைத்த பணமும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த 400 கோடி ரூபாயை ரொக்கமாக மறைத்து வைத்திருப்பது கடினம் எனவும், அதனால் அவர் அதில் இருந்து கற்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பான தகவல்கள் உயர் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன.