சர்வதேச ரீதியில் பந்தயம்...!

tubetamil
0

 நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், உலகளாவிய கணிப்பு இணையத்தளம் ஒன்றினூடாக 48 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

international-betting-on-presidential-elections-

குறித்த இணையதளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் முதற்கொண்டு விளையாட்டுப் போட்டிகள் வரை பந்தயத்தில் ஈடுபடுவதற்கு பொது மக்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த இணையதளம் மூலம் கிரிப்டோகரன்ஸியினை (Cryptocurrency) பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top