ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலை வலுப்படுத்தும் வகையில் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
குறித்த பிரசாரக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடமாகாண எதிர்கட்சித் தலைவர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.