நைஜீரியாவில் பெருமளவு கைதிகள் தப்பியோட்டம்..!!

tubetamil
0

 நைஜீரியாவின்  போர்னோ மாநிலத்தில் கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 274 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என்று நைஜீரிய சீர்திருத்த சேவை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வெள்ளப்பெருக்கினால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா முழுவதும் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆரம்பத்தில், 281 கைதிகள் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டனர் இதன்போதே 274 பேர் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து கைதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நைஜீரியா முழுவதும் பல வாரங்களாக ஏற்பட்டுள்ள வெள்ளம் 269 இறப்புகளுக்கு வழிவகுத்தது மற்றும் 640,000 க்கும் அதிகமான மக்களை இடம்பெயரச்செய்துள்ளது.

இதற்கிடையில் கடந்த புதன்கிழமை, வடக்கு நைஜீரியாவில் நிரம்பி வழியும் அணையிலிருந்து வெளியேறிய வெள்ளம் ஒரு மிருகக்காட்சிசாலையை மூழ்கடித்தது.

இதன் காரணமாக, முதலைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் அருகிலுள்ள குடியிருப்புக்களுக்குள் இழுத்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top