சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறும் பகுதி போலீசாரால் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணாத்தியாறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் பல அடி தாளத்திற்கு தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்பது.
அப்பகுதியிலிருந்து மணல் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்று 06.09.2024 தர்மபுரம் பொலிஸார் அப்பகுதியில் சென்றனர்.
இதன்போது, அங்கு சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூப்பிற்கும் அதிகமான மணலினை கையகப்படுத்தியுள்ளர்.
அப்பகுதியில் உள்ள மணலினை அங்கிருந்து தர்மபுரம் பொலிஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.