குங்கும டப்பாவை விழுங்கிய குழந்தை... நடந்த விபரீதம்..!!

tubetamil
0

குங்கும டப்பாமை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மாவட்டமான மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு வயதில் தரன்தேவா என்ற மகன் இருந்தார்.

இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள காளவாசல் பகுதியில் உள்ள அவரின் இல்லத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.



அப்போது, தனது மகன் தரன்தேவாவுக்கு சூரிய பிரகாஷின் மனைவி பவுடர் அடித்து பொட்டு வைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக குழந்தையை விட்டுவிட்டு சமயலறைக்கு சூரிய பிரகாஷின் மனைவி சென்றுள்ளார்.

ஆனால், அவர் திரும்பி வருவதற்குள் குழந்தை குங்கும டப்பாவை விழுங்கியது.அப்போது, குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதை பார்த்த அவரது தாய், அந்த குங்கும டப்பாவை எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் குழந்தை மயங்கியதுடன் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top