வாட்ஸ்அப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று வாட்ஸ்அப் என்பது ஒவ்வொரு மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதனை பாவித்து வருகின்றனர்.
எந்வொரு செய்தியாக இருந்தாலும் சில வினாடிகளில் மற்றவர்களுக்கு அனுப்பும் வசதி மட்டுமின்றி, வெவ்வோறு நாடுகளில் இருந்தாலும் நினைத்த நேரத்தில் முகம்பார்த்து பேசவும் முடிகின்றது.
ஆனால் எந்த நேரத்திலும் செய்திகளை அனுப்பி மற்றவர்களை தொந்தரவு செய்யவும் செய்கின்றனர். குறிப்பாக உங்கள் வணிகத்திற்காக அல்லது ஏதாவது ஒருவருக்கு தொடர்ந்து விளம்பர செய்திகளை அனுப்பினால், குறித்த நபர் வருத்தப்படுவதுடன், அது கோபமாக மாறி ப்ளாக் செய்யவும் செய்கின்றனர்.
இவ்வாறான சம்பவம் பல சமயங்களில் சண்டை போடும் நண்பர்களுக்குள் கூட இவ்வாறு நடக்கும். ஆனால் பிளாக் செய்யப்பட்டால் எந்த அறிவிப்பையும் வாட்ஸ்அப் அனுப்பாது.
ஆனால் சில அறிகுறிகளை வைத்து நமது வாட்ஸ்அப்பை மற்றவர்கள் பிளாக் செய்துள்ளார்களா என்பதை கண்டறிய முடியும்.அனுப்பிய செய்தி வாசிப்பட்டதா இல்லையா என்பதை காட்டும் இரட்டை நீல நிற டிக் காணவில்லை என்றால் உங்களது வாட்ஸ்அப்பை குறித்த நபர் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். இத்தருணத்தில் சாம்பல் நிற டிக் குறியை மட்டும் காணமுடியும், இவ்வாறு இருந்தால் அவர்களுக்கு நீங்கள் அனுப்பிய செய்தி வழங்கப்படவில்லையாம்.
அதே போன்று உங்களது நண்பரின் ப்ரொபைல் புகைப்படத்தினை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களது வாட்ஜ்அப்பை பிளாக் செய்து வைத்திருக்கலாம்
சம்பந்தப்பட்டவர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் அல்லது கடைசியாக பார்த்த தொடர்பினை நீங்கள் பார்க்க முடியவிலலை... இது நீண்ட நாட்களாகவே இருந்தால் உங்களை ப்ளாக் செய்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளதுகுறித்த நபரை நீண்ட நாட்களாக அழைக்க முடியவில்லை என்றாலும் உங்களது வாட்ஸ் அப் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.மேலும் குழுவில் நிர்வாகியாக இருந்தும் சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் சேர்க்க முடியாவிட்டால் குறித்த நபர் உங்களை ப்ளாக் செய்திருக்கலாம் என்று அர்த்தம்.