புகைப்படங்களை கண்டறியும் புதிய தொழில்நுட்பம்...

tubetamil
0

 AI புகைப்படங்களை அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பத்தை கூகுள் வடிவமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அனைவரது கைகளுக்கும் எட்டும் சூழ்நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளும், குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன.


இந்நிலையில் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை சுலபமாக அடையாளம் காண உதவும் மென்பொருளை கூகுள் நிறுவனம் வடிவமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலின் அடிப்படையில், AI புகைப்படங்களை watermark மூலம் அடையாளம் காணும் SynthID என்ற தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் புகைப்படங்களின் உண்மை தன்மை மற்றும் Deepfake என்று அழைக்கப்படும் போலி புகைப்படங்கள் ஆகியவற்றை கண்டறியும் வண்ணம் இந்த புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட உள்ளது.

இதனை content Provenance and authenticity  என்ற அமைப்புடன் இணைந்து கூகுள் இதனை முன்னெடுக்க உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top