வன்னியில் 423 வேட்பாளர்கள் போட்டி!

tubetamil
0

 இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்  வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இம்முறைஇடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.


அதனடிப்படையில்,  வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்



அந்தவகையில், இம்முறை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்ததுடன் அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகம் நிராகரித்துள்ளது.


அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.


இதேவேளை பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top