2024 ஆம் ஆண்டு கார்த்திகை 14 ல் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது..
அந்த வகையில் வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிடும் அகில இலங்கைத் தமிழ் கொடி சுயேச்சை குழு இலக்கம் 6 ல் தாயக்கட்டை தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது... போரினால் நலிவுற்ற எம் மக்களின் வாழ்வாதாரங்களும் பொருளாதாரமும் மேம்படவும் கல்வி கலைகளில் மீளுருப் பெறவும் தமிழ் கொடியாக நாம் மக்கள் பணியை மேற்கொண்டு வந்த வேளையில் விலைபோன சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சி எம்மை 17 மாதம் சிறைக்கு தள்ளியது..மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசியல் தலமைகள் அவர்களுடைய குடும்ப நலனில் அக்கறை கொண்டு சுயலாப அரசியல் மேற்கொண்ட வேளையில் மக்களின் கண்ணீர் துடைத்த மகத்தான பணியை செய்து வந்த நாங்கள் தவறேதும் செய்யாமல் சிறைவாசம் சென்றோம்.. இந்த நிலை மாறவும் மக்கள் சேவையை தடையின்றி வழங்கவும் அரசியல் எனும் பலம் எமக்கு வேண்டும்.. அதே நேரம் தற்கால அரசியல் களத்தில் எமக்கான அங்கிகாரம் கிடைக்கும் பட்சத்தில் எம் மக்களின் வாழ்வு,பிள்ளைகளின் எதிர்காலம்,இளைஞர்களின் தொழிநுட்ப அறிவு, சிறுகைத்தொழில் மற்றும் வேளாண்மை என யாவும் மலரும் என்பது உறுதி... மக்கள் துயரில் பல ஆண்டுகளாக தம்மை அற்பணித்து வரும் தமிழ் கொடியுடன் சமூக அக்கறையும் தேசிய சிந்தனையும் கொண்ட இளைஞர்கள் இணைந்து போட்டியிடுகின்ற காரணத்தால் அகில இலங்கை தமிழ் கொடி.. தாயக்கட்டை சின்னத்தில் தமிழ் மக்களின் குரலாக பாராளுமன்றம் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது..