சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டின் பின்னர் இடம்பெற்ற கடும் மழை!

tubetamil
0

 உலகிலே மிகப்பெரிய பாலைவனமாக சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 வருடத்தின் பின்னர் இம்முறை  கடும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாலைவனமானது ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகவும் வறண்ட பாலைவனமாக அறியப்படுகிறது.

அத்துடன் அங்கு பல கொடிய விஷம் மிகுந்த ஊர்வன உயிரினங்களை அதிகம் கொண்டுள்ளதுடன் . சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிதிழும் அரிதாகவே காணப்படும்.


இந்நிலையில் அங்கு  ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இந்த வறண்ட சஹாராவில் ஜகோரா - டாடா மணல் படுக்கைகளுக்கு இடையே உள்ளது. இந்நிலையில் திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில்,  “வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதியின் வானிலையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இப்பகுதியில் நிலவும் காற்றில் வழக்கத்தைவிட அதிகமாக ஈரப்பதம் இருப்பதால் இது மேலும் நீர் ஆவியாவதை ஊக்குவித்து மேலும் சில புயல்களை உருவாக்கும்” என  தெரிவித்துள்ளார். 

குறித்த இதே வேளை பாலைவனத்தில் ஆங்காங்கே இருக்கும் ஈச்ச மரங்களை சூழ்ந்துள்ள மழை வெள்ளக் காட்சி அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளதுடன் இந்தப் படங்கள் பல இணையவாசிகள்  கவனத்திய பெற்றுள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top