அரண்மனை 5 தொடர்பில் வெளியான தகவல்கள் பொய் - நடிகை குஷ்பூ விளக்கம்

tubetamil
0

 அரண்மனை 5 தொடர்பில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான  'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்ததாய் தொடர்ந்து அடுத்த பாகங்கள் வெளிவரத்தொடங்கின 


இந்நிலையிலரண்மனை 2 வும் ஹிட் அடித்ததை தொடர்ந்து அரண்மனை 3 ரசிகர் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை 


இந்நிலையில் மனம் தளராத சுந்தர்சி தொடர்ந்து வழக்கமான அரண்மனை தோற்களிலிருந்து சற்று மாறுதலான கதை அம்சத்துடன் அரண்மனை 4 வினை இயக்கி கடந்த மே மாதம் 3 ஆம் திகதி வெளியிட்டார்.


இந்த படமானது குடும்பங்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.


இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான அரண்மனை 5 தற்போது உருவாகுவதாக ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.



இது குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், 


“தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பொழுதுபோக்கு மற்றும் வெற்றிப் படமாக அமைந்தது அரண்மனை. அந்த படத்தின் ஐந்தாவது பாகம் குறித்து ஏராளமான தகவல்கள் உலா வருகிறது. இது தொடர்பாக புகைப்படங்கள், நடிகர்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட அனைத்தும் வெளியாகி இருக்கிறது. இது எல்லாமே பொய்யானது. ஒரு வேளை அரண்மனை படத்தின் ஐந்தாவது பாகம் எடுத்தால் நாங்கள் உங்களிடம் நேரடியாக அறிவிப்போம். அதுவரை காத்திருங்கள். கேங்கர்ஸ் படம் விரைவில் வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 


இதேவேளை சுந்தர் சி, தற்போது கேங்கர்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் சுந்தர் சி-யோடு இணைந்து வடிவேலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


தற்போது படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top