இங்கிலாந்தில் வெடித்து சிதறிய வீடு - சிறுவன் பலி ; 6 பேர் காயம்

tubetamil
0

 இங்கிலாந்திலுள்ள நியூகேசில் நகருக்கு  உட்பட்ட பென்வெல் பகுதியில் வயலட் குளோஸ் என்ற இடத்தில் வீடு ஒன்று வெடித்து சிதறியதால் பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.


இந்த சம்பவமானது நேற்று முன்தினம் (15) காலை இடம்பெற்றது.

இந்த விபத்தில் சிக்கிய 7 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில்  உயிரிழந்ததோடு இந்த சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த வீடு வெடித்தவுடன்  ஏற்பட்ட தீயை அதிகாரிகள் போராடி அணைத்து விட்டபோதும் சம்பவத்தில், அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததுடன், அதன் மேற்கூரைகள் இருபுறமும் இடிந்து விழுந்துள்ளன.


இதேவேளை அந்த பகுதியில் இருந்த ஏனையவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அதேசமயம் வீடு வெடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எந்த விவரமும் தெரிய வரவில்லை. எனினும், சம்பவத்தில் 6 பிளாட்டுகளுக்கு பலத்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top