வெளிநாட்டு யூ ரியூபர் மீது விசாரணை...!!!

tubetamil
0

 மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயிலை வேட்டையாடி, அறுத்து உண்ணும் காணொளியை யூடியூப்பில் வெளியிட்ட வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு பழங்குடியின மக்கள் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரபல  யூடியூப் சனல் ஒன்றில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், குழு மயிலை வேட்டையாடுவதையும், அதை விறகு தீயில் சமைப்பதையும், தேசிய பூங்காவிற்குள் சாப்பிடுவதையும் காட்டுகிறது.

அத்துடன் ‘கோ வித் அலி’ சேனலில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், குழு மயிலை வேட்டையாடுவதையும், அதை விறகு தீயில் சமைப்பதையும், தேசிய பூங்காவிற்குள் சாப்பிடுவதையும் காட்டுகிறது.


 தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு பழங்குடியினரை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top