யாழ் பல்கலை கழகத்துக்கு அமெரிக்கா தூதுவர் விஜயம்

tubetamil
0

 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் (Julie J. Chung) மற்றும் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு (University of Jaffna) உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அமெரிக்க தூதரகத்தினால், யூ.எஸ். எயிட் (US AID) நிதியுதவியுடன் யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் மெய்யியல் துறையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் கீழ் நடாத்தப்படும் "அகம்" உளவளத்துணை நிலையத்துக்கே குறித்த குழுவினர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த விஜயத்தின் போது, அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், யூ.எஸ். எயிட்டின் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் தலைமை அதிகாரி ஜெயதேவன் கார்த்திகேயன் மற்றும் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி சி. ரகுராம் மற்றும் உயப் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி தி. வேல்நம்பி ஆகியோருடன் மெய்யியல் துறைத் தலைவர் அபிராமி ராஜ்குமார், விரிவுரையாளர் கே.கஜவிந்தன், உளவள ஆலோசகர் ஆர்.சாவித்திரிதேவி உட்படப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உளவியல், மெய்யியல் துறைகளின் மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top