கொழும்பு சுகததாஸ மைதானத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் குழப்பமான நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் நடைபெற்ற பிரசார நிகழ்வின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
மாநாடு முடிவடைந்த போது போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு பணம் செலுத்தாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் இன்மையால் கூட்டத்திற்கு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பொலிஸார் தலையிட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களை அவர்களது இடங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.