மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்..!

tubetamil
0

 அடுத்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் (Ratnapura) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் அடுத்த வருடத்திற்குள் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்தநிலையில், வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி பதவி, பலமான அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பலமான அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது முக்கியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இந்த அரசியல் பொறிமுறையானது நிர்வாகத்திற்கு தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top