புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி விபத்துக்குள்ளாகியதால் இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று (11) இரவு கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் எனவும் புத்தளம் புணர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருவதாக புத்தளம் போலீசார் தெரிவித்துள்ளனர்.