சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் கயல் மற்றும் எழில் ஆகியோரது திருமணத்தில் பல்வேறு தடங்கல்கள் வருவது போலவும், அதை எல்லாம் தாண்டி எப்படி திருமணம் நடந்து முடிகிறது என்பதை காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் திருமணம் முடிந்துவிட்டால் கயல் சீரியல் முடிக்கப்படும் என பேச்சு இருந்து வருகிறது. ஆனால் 'சீரியல் இப்போது முடியப்போவதில்லை. அடுத்து தான் இன்னும் பல ட்விஸ்ட்கள் வர போகிறது' என அந்த சீரியலின் நாயகி சைத்ரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தான் எங்கு சென்றாலும் இதே கேள்வியை கேட்கிறார்கள், அதனால் இது தான் உண்மையான பதில் என அவர் தெரிவித்துள்ளார்.