மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

tubetamil
0

 மீள் அறிவித்தல் விடுக்கும் வரையும் கடலுக்கு செல்லவேண்டாம் என கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.


நாட்டில் நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை  புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் பயணிக்கும் சகல மீன்பிடி படகுகளும் கடலுக்கு செல்லக் கூடாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் நிலவும் எச்சரிக்கை நிலைமை தொடர்பில் தற்போது வரையில் தொழிலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு அறிவிக்குமாறும் இந்நிலைமை தொடர்பில் மீனவர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top