இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஏ.ஆர். பிரேமரத்ன மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதே போல பிரதி பொலிஸ்மா அதிபர் பி.ஹம்பாவில, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.