இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் உற்பத்திக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது.
குறித்த விடயம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான வேகத்தில் விரிவடைதலை வெளிப்படுத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதேவேளை சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதுடன் இது மத்திய வங்கியின் உள்ளக விசாரணை என்பதால் விபரங்களை குறிப்பிடுவது பொருத்தமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.