அரச காணி மற்றும் வீடுகளை மீள கையளிக்க அனுர விடுத்த காலக்கெடு

tubetamil
0

அரச வீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் ல் நீதி, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.


குறித்த இதேவேளை அரசாங்க வீடுகளை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், நேற்று வரை 11 பேரே வீடுகளை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



அத்துடன் முன்னாள் அமைச்சர்களுக்கு அரசாங்க வீடுகளை வழங்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும் கொழும்பு 7 பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 40 ஆகும். இதனால் இதுவரை ஒப்படைக்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 29 ஆகும்.


அத்துடன்  அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்குவதில் செலவினங்களை குறைக்கும் வகையில் அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்து புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top