இலங்கையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தினால் அநீதி ஏற்படும் என கருதும் எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.