மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த நபரொருவரிடம் இருந்து 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு (18) கோலாலம்பூரில் இருந்து மலேசியா எயார்லைன்ஸ் விமானமான MH 179 இல் வந்த இலங்கையர் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளில்ன் விலை பு 250 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் சுங்கத்திற்கு அறிவிக்க ஏதுமில்லாத பயணிகளின் வெளியேற்றம் ஊடாக வெளியேற முயற்சித்துள்ளதுடன், சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
35 வயதான சந்தேக நபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தேயிலை கொட்டைகள் அடங்கிய பொதிகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரும் போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.